கோவை

போலியான நிறுவனத்தின் பெயரில் ரூ.50 லட்சம் முதலீடு செய்ய வைத்து ஏமாற்றிய பெண் உட்பட மூன்று பேர் கைது.
கோவை கணபதியைச் சேர்ந்தவர் ஜோஜு மேத்யூ (51) இவர் பங்கு சந்தை முதலீடு செய்து வருகிறார்.
இந்த நிலையில் அவரை நித்யா என்ற தனியார் வங்கி உதவி மேலாளர், whatsapp குழு ஒன்றில் இணைத்துள்ளார்.
அதில் “பின் பண்டு” என்ற போலியான நிறுவனத்தின் பெயரில் முதலீடு செய்ய ஜோஜு மேத்யூ வை வலியுறுத்துள்ளனர்.
இதனை நம்பி அவர் ரூ.50 லட்சம் முதலீடு செய்த நிலையில் அது போலியான நிறுவனம் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிவக்குமார் (27), குமரேசன் (29), தனியார் வங்கி உதவி மேலாளர் நித்யா (32) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.