
செங்குன்றம் அருகே போலீசார் வாகன சோதனையில் 10 கிலோ கஞ்சா பறிமுதல். இளைஞர் கைது.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த மொண்டியம்மன் நகர் சோதனை சாவடியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சரக்கு லாரி ஒன்றிலிருந்து கையில் பையுடன் இறங்கி சென்ற இளைஞரை பிடித்து சோதனை நடத்தினர்.
அதில் தடை செய்யப்பட்ட கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து திண்டிவனத்தை சேர்ந்த காளீஸ்வரன் 25 என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கஞ்சா கடத்தி வந்த இளைஞரை சிறையில் அடைத்தனர்.