திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மண்ணான்டிபட்டி கிராமத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு கல்லூரி மாணவர் அருள்குமரன் ( இறக்கும் போது வயது 21) கடத்தி காட்டுப்பகுதியில் கொலை செய்யப்பட்டார்.
கொலை வழக்கில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு
அதே கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் மற்றும் விக்னேஷ் ஆகியோருக்கு திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் நீதிபதி
ஆள் கடத்தல் குற்றத்திற்காக 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், கொலை குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், இருவருக்கும் தலா 7000 ரூபாய் அபராதமும் விதித்து உத்திரவிட்டார்.