கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது உளுந்தாண்டார் கோயில். இந்த பகுதியில் வசித்து வருபவர் ராஜாராம் விவசாயி. இவருக்கு சொந்தமான சினை பசுமாடு ஒன்று இன்று மாலை வயல்வெளி பகுதியில் மேய்ந்து கொண்டு இருந்தபோது அங்கிருந்த சேற்றில் பசுமாடு சிக்கி கீழே விழுந்தது. அந்த சேற்றில் இருந்து பசுமாடு எழுந்து வர முடியாத நிலை ஏற்பட்டதால் ராஜாராம் உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய அலுவலர் சுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் கயிறு மூலம் கட்டி சுமார் ஒரு மணி நேரம் போராடி சேற்றிலிருந்து பசு மாட்டை மீட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.