கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனப்பகுதியில் சோர்வாகக் காணப்படும் காட்டு யானைக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து வனத்துறை மருத்துவ குழுவினர் ஆய்வு

முதல் கட்டமாக ஊட்டச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு மருந்துகளும் யானைக்கு வழங்கப்பட்டு வருகிறது தொடர்ந்து யானையை வனத்துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.
மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பகுதியில் நோய்வாய் பட்ட காட்டு யானைக்கு வன கால்நடை மருத்துவர்கள் பழங்களில் மாத்திரைகளை கொடுத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட கூத்தா மண்டி பிரிவு வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள விவசாய தோட்டம் மற்றும் வனப்பகுதி என மாறி மாறி ஒற்றை ஆண் காட்டு யானை சென்று வருவதாக வனத்துறைக்கு தகவல் கிடைக்கப் பட்டது தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்று காட்டு யானையை கண்காணித்தபோது யானை மிகவும் சோர்வாக காணப்பட்டுள்ளது நோய் தொற்று ஏற்பட்டதால் யானை காட்டுக்குள் செல்லாமல் இருக்கிறது என்றும் முதல் கட்ட ஆய்வில் தெரிய வந்தது இது குறித்து கோவையில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது
சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை கால்நடை மருத்துவர்பார்த்தபொழுது
சோர்வுடன் காணப்படும் யானைக்கு வெளிப்புற காயங்கள் ஏதும் இல்லாத நிலையில் முதல் கட்ட அடிப்படையில் தான் தற்போது வாழை, தர்பூசணி போன்ற பழங்களில் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் மற்றும் வலி நிவாரணி மாத்திரைகள் வைக்கப்பட்டு அதனை யானைக்கு வனத்துறையினர் வழங்கி வருகின்றனர்
வன கால்நடை மருத்துவர் சுகுமார் யானை உடல் நலம் சோர்வாக இருப்பதாகவும் யானையின் உடலில் காயங்கள் ஏதும் இல்லாததால் யானைக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் அதற்கு முதற்கட்டமாக ஊட்டச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு மருந்துகள் கொடுக்கப்பட்டு வருகிறது.
யானையை தொடர்ந்து மருத்துவ குழுவினர் கண்காணித்து சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.