நெல்லை மாவட்டம் இருக்கன்துறை பகுதி ஒன்றில் புதிதாக கல்குவாரி அமைப்பதற்கு கருத்துக்கேட்பு கூட்டம் செட்டிகுளம் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலால் ஆணையாளர் வள்ளிகண்ணு மற்றும் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு பொறியாளர் தலைமை வகித்தனர். கருத்து கேட்பு கூட்டத்தில் கல்குவாரிக்கு ஆதரவாகவும், கல்குவாரிக்கு எதிராகவும் பலர் கருத்துக்களை பதிவு செய்தனர்.

https://youtu.be/bwm6l9IKFlo

சிறு கனிம விதியை மீறி பல ஆவணங்கள் மறைக்கபட்டு இருப்பதால் கல்குவாரிக்கு அனுமதி வழங்க கூடாது என்று கல்குவாரிக்கு எதிர்ப்பானவர்கள் கூறினர். கல்குவாரிக்கு ஆதரவாக ஒருவர் பேசியபோது எதிர்பாளர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்பு அது இரு தரப்பினர் இடையே கைகலப்பை ஏற்படுத்தும் விதமாக சலசலப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் வந்து இரு தரப்பினரையும் சமாதானம் செய்து வைத்தனர். இறுதியில் ஆதரவாளர்கள் எதிர்ப்பாளர்கள் தங்கள் புகார் மனுக்களை அளித்தனர். பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர்.