கோலியனூர் அருகேயுள்ள திரெளபதி அம்மன் கோவில் கடந்த 2023 ஆம் ஆண்டு பட்டியலின மக்கள் வழிபாடு செய்ய வன்னியர் சமூக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மோதலாக ஏற்பட்டது. பின்னர் கோவில் சீல் வைக்கப்பட்ட நிலையில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கோவிலில் பட்டியலின மக்கள் சென்று சாமி தரிசனம் செய்ய பிப்ரவரி 20 ல் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவின் பேரில் கோவிலில் சி சி டி வி கேமராக்கள் பொருத்தப்பட்டு இன்று திறக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எஸ் பி சரவணன் தலைமையில் 300 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.