
கோவை காந்திபுரம் மத்திய நகர பேருந்து நிலையத்தில் வட்டார போக்குவரத்து, மோட்டார் வாகன அதிகாரிகள் விஸ்வநாதன், சண்முகவேல், உள்ளிட்டோர் அங்கு வரும் அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்துகளில் அதிகமாக ஒலி எழுப்பும் ஹாரன் ஒலி அளவு மீட்டர் கொண்டு சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனையானது நாள் முழுவதும் நடைபெற உள்ளது. மேலும் அதிக ஒலி எழுப்பும் ஹாரன் பொருத்தக் கூடாது என பலமுறை எச்சரித்தும் கூட ஒரு சில வாகனங்களில் இது போன்ற ஒலி அமைப்பான்களை அமைத்துள்ளனர். அந்த வாகனங்களுக்கு அபராதமும் விதிக்க உள்ளனர். அதே போல அதிகாரிகளை கண்டதும் ஹாரன்களை ஓட்டுநர்கள் அணைத்து வைப்பதால், பேருந்தின் அடியே அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் உள்ளதா எனவும் ஆய்வு செய்து வருகின்றனர்.
