கோவை மாவட்ட நிர்வாகம் – தமிழர் பண்பாட்டு ஜல்லிக்கட்டு பேரவை கோவை இணைந்து நடத்தும் மாபெரும் ஜல்லிக்கட்டு திருவிழா வரும் 27.04.2025 ஞாயிற்றுக்கிழமை செட்டிபாளையம் L&T பைபாஸ் அருகே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் தளபதியார் அவர்களின் வாழ்த்துக்களுடன், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி அவர்கள் தலைமையில், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் சின்னவர் அவர்கள் மாபெரும் ஜல்லிக்கட்டு திருவிழாவினை துவக்கி வைக்க உள்ளார்.

அந்நிகழ்வின் கால் கோள் விழா இன்று 14.04.2025 காலை 10 மணிக்கு கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேசன் அவர்கள் தலைமையில், கோவை வடக்கு மாவட்ட கழக செயலாளர் தொ.அ.ரவி அவர்கள், மாநகர் மாவட்ட கழக செயலாளர் நா.கார்த்திக் ஆகியோர் முன்னிலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.இந்த மாபெரும் ஜல்லிக்கட்டு நிகழ்வில் 1000 ஜல்லிக்கட்டு காளைகளும், மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். மேலும் கேலரி அமைப்பது, வாடிவாசல் அமைப்பது போன்ற பணிகளை விரைந்து முடிக்கவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

நிகழ்வில் கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன்,மாநில தகவல் தொழில் நுட்ப அணி இணைச் செயலாளர் டாக்டர் மகேந்திரன்,மாநில சட்ட திட்ட குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ்,மாநில நெசவாளர் அணி செயலாளர் கே.எம் நாகராஜன்,மாநில அமைப்பு சாரா ஓட்டுனர் அணி துணைச் செயலாளர் பனப்பட்டி கே. தினகரன்,மாவட்டத் துணைச் செயலாளர் சாமிநாதன், அவைத்தலைவர் மயூரா சுப்பிரமணியம், பொருளாளர் ஜெயபிரகாஷ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஏர்போர்ட் ராஜேந்திரன்,அமுத பாரதி,மு.க.முத்து,பொதுக்குழு உறுப்பினர்கள் ரகு துரைராஜ்,ஆச்சிப்பட்டி பாலு,சாந்தலிங்க குமார்,நடராஜ்,பகுதி கழக செயலாளர்கள் கார்த்திகேயன்,காதர் நகர கழக செயலாளர் நித்யா மனோகரன்,குட்டி சுதாகர்,ராமு,ஒன்றிய கழக செயலாளர்கள் செந்தில்குமார், மன்னவன்,ரமேஷ், கிரி கதிர்வேல், ஹிமாலயா யுவராஜ், தொண்டாமுத்தூர் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் செல்வகுமார்,பேரூர் கழக செயலாளர்கள் செட்டிபாளையம் கனகராஜ், கிணத்துக்கடவு கனகராஜ், ஒத்தக்கால்மண்டபம் கார்த்திகேயன், வெள்ளலூர் ராஜு, பள்ளபாளையம் கபிலன், கண்ணம்பாளையம் விஸ்வநாதன்,சூலூர் கவுதமன், மதுக்கரை நகராட்சித் துணைத் தலைவர் ரமேஷ் குமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ராஜன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மாசிலாமணி,மாவட்ட அணி அமைப்பாளர்கள் பசுமை நிழல் விஜயகுமார்,அல்தாப் உசேன், கிணத்துக்கடவு கதிர்வேல், ஞானசேகரன்,பிரபு, ரகலை பிரபு, பாஸ்கர், பட்டணம் செல்வகுமார்,மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சல்மான்,புவனேஷ், கலங்கல் சிவக்குமார், சாலம் பாஷா, பீடம்பள்ளி சுரேஷ், தேவராஜ், பட்டணம் ராஜேந்திரன், தமிழர் பண்பாட்டு ஜல்லிக்கட்டு பேரவை சார்ந்த அருண் கஸ்தூரி, ராஜகோபால், பசுபதி, சௌந்தரராஜன் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.