பல்லடம் அருகே பட்டுக்கோட்டையில் இருந்து கோவை நோக்கி சென்ற தனியார் ஆம்புலன்ஸ் சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் மோதி பயங்கர விபத்து……
இருவர் பலி ஓட்டுனர் உட்பட மூன்று பேர் படுகாயம்- பல்லடம் போலீசார் விசாரணை……

பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் முருகன் 65. இவர் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த நாச்சியார் என்பவருக்கு சொந்தமான தனியார் ஆம்புலன்ஸ் ஒன்றின் மூலம் கோவை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் ஆம்புலன்ஸ் வாகனத்தை விஜய் மற்றும் கவியரசன் ஆகிய இரண்டு பேர் இயக்கி வந்ததாக கூறப்படுகிறது. அப்பொழுது ஆம்புலன்ஸ் வேன் பல்லடம் அடுத்த பெரும்பாளி பகுதியை கடக்க முயன்றுள்ளது. அப்போது ஆம்புலன்ஸை கவியரசு என்பவர் இயக்கியதாக கூறப்படும் நிலையில் முன்னாள் சாலையோரமாக நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் ஓட்டுநரின் கட்டுப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் பலமாக மோதியுள்ளது. இதில் கோவை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட முருகன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். மேலும் ஆம்புலன்சில் உடன் சென்ற பவிதா, கல்யாணி மற்றும் ஓட்டுநர்கள் விஜய், கவியரசன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கிக் கிடந்த ஓட்டுநர் கவியரசை தீயணைப்புத் துறையினர் மூலம் பத்திரமாக மீட்டனர். மேலும் அவர்கள் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.இந்த நிலையில் முருகனின் மனைவி கல்யாணி சிகிச்சை பலனின்றி உயரிழந்தார்.மேலும் இச்சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
