ஆட்டோவில் பயணம் செய்த ஓட்டுநர் உட்பட 6 பேர் காயம்
கோவை மாவட்டம் காரமடை பகுதியைச் சேர்ந்த நகுலன், விதுன் ,நிஜூ ,வினித் உள்ளிட்ட நான்கு பேர் காரமடையில் இருந்து தென்திருப்பதி நால்ரோடு வழியாக சிறுமுகை செல்ல ஒரே இருசக்கர வாகனத்தில் நான்கு பேரும் பயணம் செய்துள்ளனர்
அந்த இருசக்கர வாகனமானது ஆலாங்கொம்பு எம் ஜி ஆர் சிலை அருகே வந்தபோது ஆலாங்கொம்பிலிருந்து 5பேர் ஆட்களை ஏற்றுக்கொண்டு பாசஞ்சர் ஆட்டோ ஒன்று தென்திருப்பதி நால்ரோடு சாலை வழியாக ஜடையம்பாளையம் சென்றது


அப்போது அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் ஆட்டோவின் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த நகுலன், மிதுன் ,மிஜூன் ,வினித் ஆகிய நான்கு பேரில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்
வினித் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஆட்டோவில் பயணம் செய்த ஓட்டுநர் உட்பட ஆறு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
விபத்து குறித்து சிறுமுகை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்