கோவை

கோவை ரத்தினபுரியை சேர்ந்த ஆம்ப்ரோஸ் (28), மற்றும் லாரன்ஸ் (27) இருவரும், கடந்த 2017 -ல் இருந்து பல்வேறு வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ரத்னபுரி அருகே சாலையில் நடந்து சென்றவரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் பணத்தை பறித்துச் செல்ல முயன்றனர்.

அப்போது இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த இருவரும் காலில் முறிவு ஏற்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த இரத்தினபுரி போலீசார் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த இருவரையும் கைது செய்தனர்.

இவர்கள் மீது 20க்கும் மேற்பட்ட வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.