
திருத்தணி முருகன் கோவிலில் சென்னை பகுதியைச் சேர்ந்த் தம்பதியினர் தவறிவிட்ட தங்க வளையலை போலீசாரிடம் ஒப்படைத்த சிறுமிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாச பெருமாள் அழைத்து அவர்களுக்கு மெடல் அணிவித்து பரிசு வழங்கி பாராட்டினார்,
சென்னை ஜவஹர்லால் நகரைச் சேர்ந்தவர் கவுதம்(33) ஐ.டி.ஊழியரான இவர்
அவரது குடும்பத்துடன் நேற்றைய முன் தினம் காரில் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துள்ளார்,.
பின்னர் வீட்டுக்கு புறப்பட்டு செல்ல கார் பார்க்கிங் வந்த போது அவர் மனைவியின் கையில் அணிந்திருந்த ரூ.1.50 லட்சம் மதிப்பிலான தங்க வளையல் தவறவிட்டது பார்த்து உடனடியாக மலைக் கோயில் புறக்காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அப்போது ராணிப்பேட்டை மாவட்டம் கோணலம் பகுதியைச் சேர்ந்த சகோதரிகள் பவித்ரா -12 ரேனுகா -8 இருவர் நேற்றைய தினம் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர்,
அவர்கள் கார் பார்க்கிங் பகுதியில் தஙக் காப்பு கிடந்ததாக கூறி திருத்தணி புறக்காவல் பணியில் இருந்த போலீசாரிடம் வழங்கி இருந்தனர்,போலீசார் சிறுமிகளை வரவைத்து தவறவிட்ட தம்பதிகளிடம் ஒப்படைத்தனர்.
சிறுமிகள் கீழே கிடந்த தங்க வளையலை ஒப்படைத்தது அனைவரும் தரப்பிலும் பாராட்டு பெற்றது,
இந்நிலையில் இன்று திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் அத்தகைய சகோதரிகளை வரவைத்து தங்க மெடல் பரிசுகள் கொடுத்து பாராட்டினார்,
தனது பெற்றோர்கள் யார் பொருட்களுக்கும் ஆசைப்படக்கூடாது என சொல்லி வைத்ததால் கீழே கிடந்த தங்க வளையலை போலீசாரிடம் ஒப்படைத்தாகவும்,
கோணலம் அரசு பள்ளியில்
5 ஆம் வகுப்பு படித்து வருவதாகவும்
தான் மருத்துவராக படிக்க ஆசைப்படுவதாகவும் சிறுமி பவித்ரா
தெரிவித்துள்ளார்,
ஆந்திரா மாநிலம் புத்தூர் பகுதியை பூர்வீகம் கொண்ட தங்கள் 15 ஆண்டுகளாக ராணிப்பேட்டை மாவட்டம் கோணலம் பகுதியில் வீடு இல்லாமல் சாலை ஓரத்தில் தங்கி ஈச்ச மரம் ஒலை துடைப்பம் ஊர் ஊராக விற்பனை செய்து வருவதாகவும்
தங்களுக்கு அரசு இடம் ஒதுக்கீடு செய்து
வீடு வழங்க வேண்டுமென சிறுமிகளின்
குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்,
