ஆனைமலை அடுத்த கணபதி பாளையம் பகுதியில் உள்ள கோயிலுக்கு குடும்பத்துடன் பெண் ஒருவர் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக சென்று உள்ளார்.கோயிலில் குழந்தைகளுக்கு மொட்டை அடித்து விட்டு அந்தப் பெண்ணும் முடி காணிக்கை கொடுத்துள்ளார். பின்பு அங்குள்ள கழிவறையை குளிப்பதற்காக அந்த பெண் பயன்படுத்தியதாக தெரிகிறது.இதனை மற்றொரு கழிவறையை பயன்படுத்தி வந்த நபர் ஒருவர் வீடியோ பதிவு செய்ததாக கூறப்படுகிறது.இது குறித்து அறிந்த அப்பெண், உறவினர்களிடம் கூறியதை அடுத்து வீடியோ பதிவு செய்த நபர் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.இதனை அடுத்து கோவிலுக்கு வந்த பெண்ணை கழிவறையில் வைத்து அனுமதி இன்றி ஆபாசமாக வீடியோ பதிவு செய்த கணபதி பாளையத்தை சேர்ந்த சதீஷ்குமார் (27) என்பவரை போலீசார் கைது செய்து ஆனைமலை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.