தமிழக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பரம்பிக்குளம் அணை தமிழக – கேரள எல்லைப் பகுதியில் உள்ளது.வறட்சி காரணமாக தற்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் அருகே வந்து செல்கின்றன.இந்நிலையில் பரம்பிக்குளத்தை அடுத்த சுங்கம் பகுதியில் காட்டு யானை குட்டி ஒன்று உணவு தேடி குடியிருப்பு அருகே வந்துள்ளது.
இதனைக் கண்டு அச்சமடைந்த அப்பகுதியில் உள்ள 2 நாய்கள் யானையை பார்த்து குரைத்துள்ளது.இந்த சம்பவத்தால் பயந்த யானை பிளிறியப்படியே அங்கிருந்து சென்றது.யானையின் கால் அளவு கூட இல்லாத இரண்டு நாய்களை பார்த்து மிகப்பெரிய உருவத்தில் உள்ள குட்டியானை தலை தெறிக்க ஓடியது.இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.