சிதம்பரம் அருகே உள்ள புவனகிரி ஆதிவராகநத்தம் பகுதியில் நூற்றாண்டுக்கு மேல் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்
120 மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர் இந்நிலையில் மாணவர்களுக்கு மதிய உணவு தயார் செய்வதற்காக சமையலறையில் சமையலர்கள் சமைத்துக் கொண்டிருந்த பொழுது திடீரென எதிர்பாராத விதமாக சிலிண்டர் எரிவாயு தீப்பற்றி எறிய தொடங்கியது
இதனால் பதட்டம் அடைந்த சமையலர்கள் சமையல் கூடத்தை விட்டு அலறி அடித்து வெளியே வந்தனர் உடனடியாக பள்ளியில் இருந்த மாணவர்கள் அப்புறப்படுத்தப்பட்டு கேஸ் கம்பெனி ஊழியர்களுக்கும் மற்றும் தீயணைப்பு துறையானருக்கும் தகவல் கொடுத்தனர் விரைந்து வந்த கேஸ் கம்பெனி ஊழியர்கள் சாதுரியமாக கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த சிலிண்டர் எரிவாயு உருளையின் மீது சணல் சாக்கில் தண்ணீரை நனைத்து எரிவாயு உருளையின் மீது போர்த்தி தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்
இதனை அடுத்து குழாய் மூலம் தண்ணீர் செலுத்தி சிலிண்டர் எரிவாயு உருளையின் வெப்பத்தை தனித்தனர். பின்னர் தீயணைப்பு துறையினர் முழுமையாக அணைத்தனர் இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது