ராமேஸ்வரம் தீவு பகுதி இலங்கைக்கு மிக அருகாமையில் இருக்கும் காரணத்தால் அண்மை காலமாக இலங்கைக்கு கஞ்சா, பீடி இலைகள், தங்கக் கட்டிகள், மற்றும் போதை பொருட்கள் கடத்தும் சம்பவங்கள் அரங்கேரி வருகிறது

அவ்வப்போது காவல்துறை அதிகாரிகள் கடற்கரையில் ரோந்து பணி மேற்கொள்ளும் பொழுது இது போன்ற கடத்தல் சம்பவங்களை தடுத்தாலும் கடத்தல் காரர்கள் காவல்துறை அதிகாரிகளுக்கு தெரியாமல் கடத்தல் சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்

இந்நிலையில் நேற்றைய தினம் மண்டபம் கடற்கரைப் பகுதியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா பொட்டலங்கள் கடத்த உள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து நேற்று நள்ளிரவு முதல் மண்டபம் கடலோரப் பகுதியில் தீவிர ரோந்து பணியில் சுங்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர் அவ்வாறு மண்டபம் தென்கடல் அய்யனார் கோவில் கடற்கரை பகுதியில் கேட்பாரற்று நின்ற சொகுசு கார் ஒன்றை சந்தேகத்தின் அடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் திறந்து சோதனை மேற்கொள்ளும் பொழுது அதில் 28 பொட்டலங்களில் 56 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது அதனை கைப்பற்றி சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அது மட்டும் அல்லாமல் கேட்பாரற்று கிடந்த சொகுசு காரின் உரிமையாளர் யார் கடத்தலுக்கும் இவருக்கும் சம்பந்தம் உள்ளதா இது சம்பந்தமான கடத்தல்காரர்கள் குறித்து தற்போது தீவிர விசாரணையை சுங்கத்துறை அதிகாரிகள் துவங்கியுள்ளனர்.