திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில்
1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது.
வருடம் தோறும் குண்டம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம் அதன்படி இந்த ஆண்டு பங்குனி மாதம் குண்டம் திருவிழா
கொண்டத்துக் காளியம்மன் கோவிலில் கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்கார பூஜைகளும் நடைபெற்றன, முக்கிய நிகழ்வாக இன்று குண்டம் இறங்குதல் நிகழ்வு நடைபெற்றது அதிகாலை முதல் அம்பதாயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து
கோவிலின் முன் திறந்த வெளியில் 60 அடி நீளம் உடைய குண்டத்தில்
இறங்கி கொண்டத்துக்காளியம்மன் வழிபட்டனர்,
பக்தர்கள் பக்தி சிரத்தையுடன் அக்னி குண்டத்தில் இறங்கும் காட்சி மெய்சிலிர்க்க வைத்தது.
நாளை மாலை தேரோட்டம் நடைபெற உள்ளது. குண்டம் இறங்க திருப்பூர், கோவை ,ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்
குண்டம் திருவிழாவை
யொட்டி 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும் கோவில் வளாகத்தில் புறக்காவல் நிலையம் மற்றும் 2 இடங்களில் உயர் கண்காணிப்பு கோபுரமும் அமைக்கப்பட்டு உள்ளது.
பக்தர்கள் வசதிக்காக கோவில் வளாகம் முழுவதும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் குண்டம் இறங்குவதை பார்க்க 2 இடங்களில் எல்.இ.டி. திரை,குடிநீர் வசதி, குண்டம் இறங்கும் பக்தர்கள் வரிசையாக செல்ல தடுப்புகள், குண்டம் இறங்கும் பக்தர்கள் குளிக்க 20 ஷவர் கொண்ட அறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.