இந்திய நாடாளுமன்றத்தில் ஒன்றிய பாஜக அரசு கடந்த 2 தினங்களுக்கு முன்பாக எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது

இது நாடு முழுவதும் இஸ்லாமியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக திருப்பூரில் மனித நேய ஜனநாயக கட்சியின் சார்பில் ரயில் நிலைய முற்றுகை போராட்டம் மாவட்ட செயலாளர். ராயல் ராஜா தலைமையில் நடைபெற்றது.இந்த போராட்டத்தில் ஒன்றிய பாஜக அரசு புதிய வக்ஃப் வாரிய சட்டத்தை திரும்ப பெற வேண்டும், சிறுபான்மையினர் மீதான ஒடுக்கு முறைகளை நிறுத்திட வேண்டும்

உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு சட்டை அணிந்தவாரு கோசங்களை எழுப்பி ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மனித நேய ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.