சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வைத்திலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் 40 வயதான மாரியப்பன் காரைக்குடி முத்தாலம்மன் கோவில் அருகே மெடிக்கல் கடை நடத்தி வருகிறார்

இந்நிலையில் செஞ்சை பகுதியில் இன்று இரவு தேவகோட்டையில் இருந்து காரைக்குடி நோக்கி அதிவேகமாக வந்த தனியார் சொகுசு பேருந்து மெடிக்கல் உரிமையாளர் சென்ற இருசக்கர வாகனத்தின் மோதி விபத்து ஏற்பட்டது

இதில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த மாரியப்பன் சம்பவ இடத்திலே தலை நசுங்கி உயிரிழந்தார் விபத்து சம்பவம் குறித்து காரைக்குடி தெற்கு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.