திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட அவிநாசி சாலை புஷ்பா பேருந்து நிறுத்தம் அருகில் மேம்பட்ட வசதிகளுடன் அதிநவீன டெக்னாலஜியுடன் கூடிய புதிய அகர்வால் கண் மருத்துவமனை இன்று திறக்கப்பட்டது. இதனை திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சுப்பிரமணியம் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அகர்வால் கண் மருத்துவமனையில் தலைவர் சீனிவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த புதிய கண் மருத்துவமனையில் கண் குறை, கண் அழுத்த நோய், கருவிழி படலம், விழித்திரை ஒளிவிளகல், சுற்றுப்பாதை மற்றும் வெளியில் ஒட்டுறவை சிகிச்சைகள் உட்பட பல்வேறு கண் மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளது. இந்த மருத்துவமனையானது 12,700 சதுர அடி பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
செஞ்சூரியன் பாகோ இயந்திரம், நீடெக் ஓசிடி போன்ற அதிநவீன நோய் அறிதல் உபகரணங்கள் இங்கு நிறுவப்பட்டுள்ளது. கண் சிகிச்சியில் திறமையான சிறப்பு நிபுணர்களின் குழு மற்றும் பயிற்சி பெற்ற 20 துணை மருத்துவ பணியாளர்கள் மூலம் பொது மக்களுக்கு இங்கு சிகிச்சை வழங்கப்படுகிறது.
இந்த புதிய மருத்துவமனையானது ஆண்டுதோறும் 35 ஆயிரம் நோயாளிகளுக்கு கண் சிகிச்சை மற்றும் பராமரிப்பு வழங்கப்பட இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.