அறந்தாங்கி பகுதியிலிருந்து பல்வேறு மாவட்டங்கள் மற்றும் சென்னைக்கு செல்ல தினசரி ரயில் இயக்கப்பட்டு வந்தது. அதனை தொடர்ந்து அகல ரயில் பாதையாக மாற்றுவதற்கு ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இரயில் பாதை அமைக்கப்பட்டு வாரத்தில் ஒவ்வொரு நாட்கள் ரயில் இயக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்றி பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ராமேஸ்வரத்தில் இருந்து தாம்பரம் வரை தினசரி அதிவிரைவு ரயிலை தொடங்கி வைத்தார். அறந்தாங்கி வழியாக செல்லும் ரயிலானது சரியாக 7:20 மணிக்கு அறந்தாங்கி ரயில் நிலையத்தை அடைந்தது. அப்போது ரயில் நிலையத்தில் குவிந்திருந்த இரயில் உபயோகிப்பாளர்கள் நல சங்கத்தினர்,

பாஜக உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர், பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.அங்கே திரண்டிருந்த பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். மேலும் இரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.