கடத்தலுக்கு பயன்படுத்திய மாருதி ஆம்னி வேன் பறிமுதல்.குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீசார் நடவடிக்கை.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டத்திற்கு உட்பட்ட வையப்பமலை அருகே குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அவ் வழியாக வந்த மாருதி ஆம்னி வேன் நிறுத்தி சோதனை நடத்தினர்.

அதில் 70 கிலோ எடையுள்ள 25 மூட்டைகளில் 1,750 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.


அதனை கைப்பற்றிய போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி சேர்ந்த சக்திவேல் (42) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.


மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய மாருதி ஆம்னி வேன் யை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.