உலகப் பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் இன்று ஆழித்தேர்த் திருவிழா நடைபெற உள்ளது இதனை முன்னிட்டு அதிகாலையில் விநாயகர் மற்றும் சுப்பிரமணிய தேர் பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது இதில் பெருந்திரளான மக்கள் பங்கேற்று ஆர்வத்துடன் தேரை இழுத்து வருகின்றனர்.


இதன் தொடர்ச்சியாக காலை 9 மணிக்கு மேல் உலக பிரசித்தி தியாகராஜர் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட உள்ளது.இன்று மாலை நான்கு வீதிகளையும் வலம் வந்த பின்னர் ஒரே நேரத்தில் அம்பாள், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட ஐந்து தேர்களும் நிலையடி வந்து சேரும் என்பது குறிப்பிடத்தக்கது