பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஆதியூர் அரண்மனை காடு தோட்டத்தில் வசித்து வருபவர் விவசாயி பாலசுப்பிரமணியம் (60).இவர் தோட்டத்து பகுதியில் வசித்து வருகிறார்.இவருக்கு சொந்தமான பண்ணையில் மாடு மற்றும் கன்று குட்டிகள் உள்ளது.இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல அன்றாட பணிகளை முடித்துவிட்டு தனது தென்னந்தோப்பில் மாடு மற்றும் கன்று குட்டிகளை விவசாயி பாலசுப்ரமணியம் கட்டி வைத்துச் சென்றுள்ளார்.மீண்டும் காலை வந்து பார்த்தபோது கன்றுக்குட்டியின் வயிற்றுப் பகுதி கடித்து குதற
ப்பட்ட நிலையில் கன்று குட்டி இறந்து கிடந்தது.மேலும் இறந்த கன்றின் அருகில் சிறுத்தையின் கால் தடம் தென்பட்டுள்ளது.இது குறித்து அதிர்ச்சி அடைந்த பாலசுப்பிரமணியம், அக்கம் பக்கம் உள்ள தோட்டத்தினருக்கும் போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் தகவல் கொடுத்துள்ளார்.பின்பு இது குறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு கால் தடங்களை ஆய்வு செய்து வருகின்றனர் .தோட்டத்து பகுதியில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் எனவும், பொதுமக்களின் உயிருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.