கோவை தடாகம் வனப்பகுதியில் இருந்து தினமும் வெளியேறும் காட்டு யானைகள், தடாகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய தோட்டங்களுக்குள் புகுத்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனை கண்காணிக்கவும், காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டவும் கோவைச் சரக வனத்துறையினர் தினமும் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு தடாகம் மாரியம்மன் கோவில் அருகே உள்ள வடக்கு வாத்தியார் தோட்டத்திற்குள் 3 குட்டிகளுடன் புகுந்த காட்டு யானைகள், அங்கு மாட்டு தீவனத்திற்காக பயிரிடப்பட்டிருந்த கம்பு நேப்பியர் புற்களை மேய்ந்தது.
மேலும் விளை நிலங்களையும் சேதப்படுத்தியது. தகலறிந்து வந்த வனத்துறையினர் டார்ச் விளக்குகளை அடித்தும், ஒலி எழுப்பியும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
மேலும் அடிக்கடி யானைகளை விளைநிலங்களுக்கு புகுந்து சேதப்படுத்துவதால் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், வனப்பகுதியில் இருந்து யானைகள் வெளியேறும் போதே அதனை தடுத்து நிறுத்தி வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
