பூசணிக்காய் தக்காளி காய்கறிகளை வீசி எறிந்து
50க்கும் மேற்பட்ட விவசாயிகள் திடீர் நீச்சல் குளத்தில் திரண்டு கப்பல் விடும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
திருப்பூர் மாநகரம் தென்னம்பாளையம் தெற்கு உழவர் சந்தை பகுதியில் குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீரில்
கப்பல் விடும் போராட்டம் விவசாயிகள் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளான
பொங்கலூர்,காட்டூர்,காட்டூர் புதூர், உகாயினூர்.வடக்கு அவிநாசி பாளையம், ,தெற்கு அவிநாசி பாளையம் பல்லடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விளைவிக்கக்கூடிய விவசாய விளைபொருட்கள் தக்காளி,கத்திரிக்கா பீர்க்கங்காய் புடலங்காய்,பூசணிக்காய் காலிபிளவர் மல்லி தலை,ஆகியவற்றை விவசாயிகள் இந்த தென்னம்பாளையம்தெற்கு உழவர் சந்தை பகுதிக்கு கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம்,அதிகாலை முதலிலேயே தொடர் கன மழை பெய்ததால் நீச்சல் குளமாக மாறிய தென்னம்பாளையம் தெற்கு உழவர் சந்தை காரணமாக, விவசாயிகள் கொண்டு வந்த விளை பொருட்களை விற்க முடியாமல் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டனர்,
மேலும் அதனை எடுத்துச் செல்ல முடியாமல் பூசணிக்காய் தக்காளி கீரைகள் விசி சென்றனர்,
தெற்கு உழவர் சந்தை பகுதியில் உள்ள இடத்தில் மழை நீர் தேங்கி நிற்பதால் விவசாயிகள் சாலையில் தங்களது விலை பொருட்களை வைத்து விற்பனை செய்து வரக்கூடிய அவலம் காணப்படுகிறது,
தெற்கு உழவர் சந்தையில் மழைக்காலங்களில் தேங்கு மழை நீரை அப்புறப்படுத்த வேண்டும் என
மாநகராட்சி நிர்வாகம் பலமுறை மனுக்கள் வழங்கியும் சரியான நடவடிக்கை எடுக்காததால் விவசாயிகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர், இங்கு தேங்க கூடிய மழை நீரை வெளியேற்றக் கூடிய மழைநீர் வடிகால் வசதியை ஏற்படுத்தாததால் அடைத்ததால் தண்ணீர் நீச்சல் மழை நீர் வெளியே இல்லாமல் குளம் போல் தேங்கி நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது மாநகராட்சி நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையில் இந்த திடீர் நீச்சல் குளத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர்கள், விவசாயிகள் 50க்கும் மேற்பட்டவர்கள் கப்பல் விடும் போராட்டத்தை நடத்தினர்,
ஏற்கனவே பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திற்கு தீங்கும் மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுக்கள் வழங்கியும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காததால் இன்று முதல் கட்டமாக இந்த மழை நீரில் கப்பல் விடும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும், விவசாயிகள் போராட்டத்தை தீவிர படுத்தப் போவதாகவும் அறிவித்துள்ளனர்,