
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கரூர் திண்டுக்கல் தேசிய நான்கு வழிச்சாலையில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து தேனியை நோக்கி உளுந்து மூட்டைகளை ஏற்றுக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை நாமக்கல் மாவட்டம் செவ்வந்திபட்டியைச் சேர்ந்த பிரதீப் என்பவர் ஓட்டிச் சென்றார்.
இந்த நிலையில் லாரி வேடசந்தூர் அருகே உள்ள காக்காதோப்பூர் பிரிவில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர உயர்மின் விளக்கு கம்பத்தின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரியின் முன் பக்கம் முழுவதும் நொறுங்கியது.
உயர்மின் விளக்கு கம்பு உடைந்து லாரியின் மீது விழுந்தது.
லாரி ஓட்டுநர் பிரதீப் காயம் இன்றி உயிர்தப்பினார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் போலீசார் மற்றும் வேடசந்தூர் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் விபத்தில் சிக்கிய அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
மேலும் இந்த விபத்துக்கு குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.