தமிழகத்தில் பச்சிளங்குழந்தைகளுக்கு தூக்கநேர்ச்சை நடைபெறகூடிய  கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற  கொல்லங்கோடு பத்திரகாளியம்மன் திருக்கோவில்    பங்குனிமாதம் பரணி நட்சத்திரத்தில்  தூக்கநேர்ச்சை நடைபெறுவது வழக்கம் இந்த ஆண்டிற்கான தூக்கதிருவிழா கடந்த 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது தொடர்ந்து 10ஆம் திருவிழாவான இன்று பங்குனி மாத பரணியையொட்டி பச்சிளம் குழந்தைகளுக்காகான தூக்கநேர்ச்சை இன்று அதிகாலை முதல் துவங்கி நடைபெற்றுவருகிறது


தூக்கதிருவிழாவிற்காக வட்டவிளை மூலக்கோவிலிருந்து அம்மன் திருமுடிகள் தூக்கம் நடைபெறும் வெங்கஞ்சி கோவிலிலுக்கு இழுந்தருளியது
அம்மன் சந்நதியில் குழந்தையில்லாத தம்பதிகள் குழந்தைபாக்கியம் கிடைக்க வேண்டியும்  கிடைத்த குழந்தை மற்றும் மூன்று வயதிற்குட்பட்ட குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டியும்  பக்தர்கள் தூக்கநேர்சை நடத்துகிறார்கள் பச்சிளம் குழந்தைகளை நேர்ச்சைக்கு கொடுத்த பிறகு அந்தரத்தில் குழந்தைகளை தூக்ககாரர்கள் கையில் வைத்துக்கொண்டு கோவிலை வலம் வரும் காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது

சுமார் 40அடி உயரம் கொண்ட இரண்டு வில்கள் வண்டியில் பொருத்தபட்டு ஒவ்வொரு வில்லிலும் இரண்டு தூக்ககாரர்கள் என 4பேர் இந்த வில்லுடன் பிணைக்கபட்டு அவர்களின் கைகளில் நேர்ச்சை குழந்தைகள் வழக்கபட்டு இந்த தேரை பக்தர்கள் சரண கோஷத்துடன் ஆலயத்தை ஒருசுற்று சுற்றி வருவது தூக்கநேர்ச்சை துக்கத்திருவிழாவாகும் இந்த ஆண்டு 1166குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடைபெறவுள்ளது

300முறை இந்த தூக்கவில்லில் குழந்தைகளுடன் மூலகோவிலை சுற்றி வருவது குறிப்பிடதக்கது இன்று துவங்கிய தூக்கநேர்சையானது நாளை காலை வரை தொடர்ந்து நடைபெறுகிறது இந்நிகழ்ச்சியில் தமிழகம் மற்றும் கேரளாவிலிருத்து லட்சகணக்கான பக்தர்கள் பங்கேற்கவுள்ளனர்