உலகப் பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜ திருக்கோவில் பங்குனி திருவிழாவில் நடைபெறும் மிகப் பிரம்மாண்டமான ஆழி தேர் திருவிழா வரும் ஏப்ரல் 7 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்ற நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார்.


ஆழித்தேர் திருவிழாவில் திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து பல லட்சம் கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.