திருப்பூர்: திமுக தவெக போட்டி கிடையாது. எங்களுக்கு எல்லாமே தளபதி தான். “எந்த தளபதி?” என்ற கேள்விக்கு அதைப்பற்றி சொல்ல வேண்டிய ஆள் நான் இல்லை.
மேலே தலைவர்கள் இருக்கிறார்கள். சட்டமன்றத்தில் கேள்வி கேட்க சிலர் வேண்டுமே என விட்டு வைக்கிறோம். என திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., க.செல்வராஜ் பேட்டி
அண்ணாமலையை விட பெரிய பிம்பம் இருக்கிறதா? அதையே தோற்கடித்தோம்.
திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ கா.செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்து தொகுதி மறு வரையறை குறித்தான அனைத்து கட்சி கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்தும் பல்வேறு மாநிலங்கள் கலந்து கொண்ட கூட்டு நடவடிக்கை குழு குறித்தும் தெரிவித்தார்.
அவரிடம் தவெக தலைவர் விஜய் தெரிவித்த திமுக தவெக நேரடி போட்டி குறித்த கேள்விக்கு எங்களுக்கு எல்லாமே தளபதி தான் என தெரிவித்தார். எந்த தளபதி என்ற கேள்விக்கு அது குறித்து நான் சொல்ல முடியாது.
மேல் உள்ள தலைவர்கள் பேசுவார்கள் சட்டமன்றத்தில் கேள்வி கேட்க சிலர் வேண்டும் என்பதால் விட்டு வைக்கிறோம் என தெரிவித்தார்.
மேலும் அண்ணாமலையை விட ஒரு பிம்பம் இருக்கிறதா அவரை பெரிதாக பேசினார்கள் ஆனால் கோவையில் அவரை வீழ்த்தி உள்ளோம். கோவையில் வாக்களிக்காத மக்களுக்கும் பல திட்டங்களை முதல்வர் வாரி வழங்கி உள்ளார் அதனால் மக்கள் திமுகவை ஆதரிக்கின்றனர் என தெரிவித்தார்.