
கவர்னர் சோலை பகுதியில் உள்ள கொல்லகோடு மந்தை சேர்ந்தவர் கேந்தர் குட்டன்.
தோடர் பழங்குடியினத்தை சார்ந்த இவர் எருமைகள் வளர்ப்பு மற்றும் விவசாயம் செய்து வரும் நிலையில் நேற்று மாலை எருமையை தேடி வன பகுதிக்குள் சென்றுள்ளார். இரவு நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வராததால் அவரை உறவினர்கள் இரவு முழுவதும் தேடினர்.
ஆனால் கண்டு பிடிக்க முடிய வில்லை. அதனை தொடர்ந்து இன்று காலை மீண்டு தேடிய போது கேந்தர் குட்டனின் உடல் கண்டுபிடிக்கபட்டது.
அப்போது அவரை புலி அடித்து கொன்று பாதி உடலை சாப்பிட்டு உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அது குறித்து உடனடியாக பார்சன்ஸ் வேலி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.