தென்னிந்தியாவில் புகழ்பெற்ற சந்தையாக விளங்கிவரும் பொள்ளாச்சி மாட்டுச்சந்தை வாரம் தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை என இரு தினங்களில் கூடுகிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாடுகள் விற்பனைக்கு வரும் கர்நாடகா, ஆந்திரா,தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகள் மாடுகளை வாங்கிச் செல்வது வழக்கம். இதன்மூலம் 2 கோடி வரை வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் செவ்வாய் கிழமையான இன்று பொள்ளாச்சி மாட்டுச்சந்தைக்கு மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன
குறிப்பாக விவசாயிகள் பயனற்ற நிலையில் இருந்த மாடுகளை அதிக விலைக்கு விற்பனை செய்து லாபம் ஈட்டியதாகவும் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி
வெளி மாநில வியாபாரிகள் பெரும்பாலான
மாடுகளை வாங்கி செல்வதால் சுமார் 5 கோடி வரை வர்த்தகம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர் .