திருப்பூர் மங்கலம் சாலை சுல்தான்பேட்டை அடுத்த இந்திரா காலனி பகுதியில் புதிதாக தனியார் மதுபான கூடம் அமைப்பதற்கான அனுமதி பெறப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதியில் ஏராளமான பெண்கள் குழந்தைகள் வசித்து வரும் நிலையில் தினம் தோறும் பள்ளி கல்லூரி மற்றும் வேலைக்கு சென்று வரும் நிலையில் மதுபான கூட்டத்திலிருந்து வெளியே வரும் போதை நபர்களால் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எனவும் தங்கள் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை மற்றும் தனியார் மதுபான கூடம் தேவையில்லை என புதிதாக அமைய உள்ள தனியார் மதுபான கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திரா காலனி பகுதி பொதுமக்கள் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.