உதகையை நோக்கி வந்த சுற்றுலா பயணிகள் யானை வருவதைக் கண்டு மீண்டும் மசினகுடியை நோக்கி காரை வேகமாக எடுத்து சென்று தப்பித்தனர்.

உதகையிலிருந்து முதுமலை செல்லக்கூடிய கல்லட்டி மலை பாதை 36 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இந்த மலைப்பாதையில் காட்டு யானைகளின் நடமாட்டமும் அதிகமாக காணப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக இந்த மலைப்பாதையில் ஒற்றைக் காட்டு யானை சுற்றி திரிகிறது. இதனால் மலை பாதையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வருகின்றனர். இன்று காலை சுற்றுலா பயணிகள் உதகையை நோக்கி மலைப்பாதையில் வந்த போது எதிரே வந்த காட்டு யானை காரை கண்டதும் துரத்தியது.
இதனால் காரை வேகமாக திருப்பிய சுற்றுலா பயணிகள் மீண்டும் மசினகுடி பகுதியை நோக்கி சென்றனர் வேகமாக வந்த காட்டு யானை சாலையிலேயே முகாமிட்டதால் மலைப்பாதையில் பயணித்த வாகனங்கள் அனைத்தும் மசினகுடியை நோக்கி திரும்பி சென்றனர்.
காட்டு யானை காரை துரத்திய வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.