நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் உள்ள வனவிலங்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது இதனால் உணவு தேடி இரவு நேரங்களில் கரடி சிறுத்தை புலி போன்ற வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் வருவது அதிகரித்து வருகிறது.
இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ள நிலையில் கடந்த சில நாட்களாக உதகை அருகே உள்ள புது மந்த பகுதியில் கரடி ஒன்று உலா வருகிறது. இந்தக் கரடி பேக்கரிக்குள் நுழைந்து உணவு பசித்த நிலையில் மீண்டும் அதே பகுதியில் இரவு நேரத்தில் சுற்றி தெரிந்தது.
அப்போது அந்த கரடியை நாய் துரத்தியதால் கரடி அங்கிருந்து ஓடியது. இந்த காட்சி தற்போது வெளியாகி உள்ளது. இதே போல மசினகுடியில் இருந்து சிங்கார நீர் மின் நிலையத்திற்கு செல்லும் நெடுஞ்சாலையில் நேற்று இரவு புலி நடந்து வந்தது. அப்போது அந்த வழியாக சென்ற மின் நிலைய ஊழியரின் காரை பார்த்த அந்த புலி மீண்டும் அந்த சாலையிலேயே நடந்து சென்று வானபகுதிக்குள் சென்றது. அந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் சிங்கார சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் சென்று வருமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.