தமிழகத்திற்கு துரோகம் இழைத்த கட்சிகளுக்கு திமுக சிறப்பு வரவேற்பு அளிப்பதாகவும் குடிநீரை மற்ற மாநிலங்களிடம் கோட்டை விட்டு விட்டு தமிழகத்தை குடிகார மாநிலமாக மாற்றி வருவதாகவும் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் புரிந்த முதல்வர் ஸ்டாலினின் திமுக அரசை கண்டித்து வீடு தோறும் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம் திருப்பூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று துவங்கப்பட்டது.
திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் சீனிவாசன் இல்லத்தில் கருப்பு கொடி ஏற்றப்பட்டு நிகழ்ச்சி துவங்கியது இதனை தொடர்ந்து பாஜகவினர் தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியதுடன் பொதுமக்களுக்கும் கருப்பு கொடி ஏற்ற பிரச்சாரம் செய்யப்படும் என தெரிவித்தனர்
மேலும். திமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள் குறித்து பொது மக்களிடம் விரிவாக எடுத்துரைக்கப்படும் என பாஜகவினர் தெரிவித்தனர் இந்த போராட்டத்தில் ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டனர்.