முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.
திருவிழா நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பல்வேறு மாவட்டங்கள் மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை தருவார்கள்.
இந்த நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்த வண்ணம் உள்ளனர். கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள் கோவில் முன்புள்ள கடற்கரையில் புனித நீராடி நாழி கிணற்றில் குளித்துவிட்டு குடும்பத்துடன் நீண்ட வரிசையில் இன்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதனால் பொது தரிசனம், 100 ரூபாய் கட்டண தரிசனம், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான தரிசன வரிசையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது. அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறந்து பூஜைகள் நடந்த நிலையில் சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக பக்தர்கள் நீண்ட வரிசையில் குடும்பத்துடன் நின்று தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும் திருச்செந்தூர் கோவில் வளாகம், கடற்கரை பகுதி, நாழிக்கிணறு, முடி காணிக்கை செலுத்தும் இடம், பேருந்து நிலையம் போன்ற பகுதிகளிலும் அதிக அளவில் பக்தனின் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளத.