நெல்லை மாவட்டம் நாங்குநேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சில நாட்களாக கரடி ஒன்று உலாவி வருகிறது. இது தொடர்பாக வனத்துறையினர் குண்டு வைத்து கரடியை பிடிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆனால் கரடி வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்த நிலையில் இன்று அதிகாலையில் நான்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியில் கொம்பையா என்பவர் வீட்டில் இருந்து வெளியே வந்தபோது வீட்டில் வாசலில் கட்டி இருந்த 4 ஆட்டு குட்டிகளில் ஒரு குட்டி மட்டும்உடல் கிழிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் கரடி வந்து சென்றதற்கான கால் தடம் கிடந்ததை கண்டு உடனே அங்கிருந்த வனத்துறை ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வனத்துறை ஊழியர்கள் அந்த பகுதியில் கரடியை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.