கோவை மாநகரில் போதை பொருள் தடுப்பு மற்றும் சட்ட விரோத செயல்பாடுகளை தடுக்கும் வகையில் மாநகர போலீசார் அடிக்கடி ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட பேருந்து நிலையங்களில் காட்டூர் ஆய்வாளர் சரவணன் தலைமையிலான சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சந்தேகத்திடமாக உள்ள நபர்களின் உடமைகளையும் சோதனையிட்டு வருகின்றனர்.