நெல்லை மாவட்டம் கூடங்குளம் அம்பேத்கார் நகர் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
மூன்றாவது வார்டு பகுதில் உள்ள தெருவில் நள்ளிரவு பெய்த மழையின் காரணமகாக தேங்கிய மழை நீரால், தெருக்கள் சேரும் சகதியுமாக உள்ளது. மேலும் போதிய வாறுகால் வசதி இல்லாததால் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து காணப்பட்டது.
இதனால் நோய் தொற்று ஏற்பட கூடும் என அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றர்.
இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். வாகன ஓட்டிகளும் வாகனங்களை இயக்க முடியாமல் சிரமப்பட்டனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாறுகால் அமைத்தும் மழை நீருடன் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துளனர்.