நெல்லை ராணுவ வீரரின் வீட்டை உடைத்து உரிமம் பெற்ற துப்பாக்கி மற்றும் 25 தோட்டாக்கள் கொள்ளை.
நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த சமூகரெங்கபுரத்தைச் சார்ந்த சார்ந்தவர் அழகு(42). இவர் அமிர்தசரஸில் இந்திய எல்லை பாதுகாப்பு படையில் (பார்டர் செக்யூரிட்டி ஃபோர் சு )பணியாற்றி வருகிறார்.
இவர் தன்னுடைய உரிமம் பெற்ற துப்பாக்கி மற்றும் 25 குண்டுகளையும்(BULLUT) சமூகரெங்கபுரத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வைத்து விட்டு சென்றுள்ளார். நேற்று பெற்றோர்கள் வீட்டை பூட்டி விட்டு சென்ற நிலையில்
நேற்று மர்ம நபர்கள் வீட்டை உடைத்து வீட்டில் உள்ள துப்பாக்கி மற்றும் அதற்குண்டான 25 குண்டுகளையும் திருடிச் சென்றுள்ளனர்.
இது பற்றி அழகு கொடுத்த புகாரின் பேரில் ராதாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.