திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் கூட்டமைப்பு சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் திருப்பூர் வட்டத் தலைவர் லியாகத் அலி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 70 வயது நிரம்பிய பென்சனர்களுக்கு 10% கூடுதல் பென்ஷன் வழங்கிட வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை தொடர வேண்டும். குறைந்தபட்ச பென்ஷன் 9000 வழங்கிட வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டம் காசில்லா மருத்துவம் உறுதிப்படுத்திட வேண்டும் , குடும்ப பாதுகாப்பு நிதியை 3 லட்சமாக உயர்த்திட வேண்டும் , பென்சனர் மரண முற்றால் குடும்ப பாதுகாப்பு நிதியிலிருந்து ஈமச்சடங்கிற்கு 10,000 ரூபாய் அனுமதித்திட வேண்டும்.

20 ஆண்டு பணிக்கு முழு பென்ஷன் தரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. கோரிக்கைள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் தலைமை நிலைய செயலாளர் அப்பாசாமி கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.