திருப்பூர் பனியன் நிறுவனங்களில் ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில் இவர்களின் பெரும் பண்டிகையான ஹோலியை உறவினர்கள் உடன் கொண்டாட சொந்த ஊருக்கு செல்ல புலம்பெயர் தொழிலாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனால் திருப்பூர் ரயில் நிலையத்தில் ஏராளமான புலம் பெயர் தொழிலாளர்கள் இரண்டாவது நாளாக குவிந்து வருகின்றனர்.

டாடா நகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறினால் நாளை மறுநாள் (ஹோலி பண்டிகை) காலையில் சொந்த ஊருக்கு செல்லாம் என்பதால் இறுதி முயற்சியாக ஏராளமான தொழிலாளர்கள் ரயில் நிலையத்தில் குவிந்துள்ளனர்.

முன்பதிவில்லா பெட்டிக்கு ஏராளமானோர் காத்திருக்கின்றனர். ரயில் வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.