சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கருமந்துறை பகுதியில் பகுடுபட்டில் ஞான தீபம் என்ற தனியார் பள்ளி வேன் பள்ளி மாணவர்களை ஆத்துவளவு, முடவன் கோவில் பகுதியில் இருந்து வந்து கொண்டிருந்த போது அத்திரிபட்டி என்றும் இடத்தில் அதி வேகத்தில் வந்த பள்ளி பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள கல் சுவற்றில் மோதி வேன் கவிழ்ந்தது

இதில் 30 குழந்தைகள் இருந்த நிலையில் 10 குழந்தைகளுக்கு லேசான காயங்களுடன் 2 குழந்தைகள்,ஒட்டுநர் செல்வம் ஆகிய மூன்று பேர் அதிக காயங்கள் ஏற்பட்டுள்ளதால் கருமந்துறை அரசு மருத்துவர் பால சண்முகம் அனைத்து குழந்தைகளுக்கும் முதலுதவி செய்து இரண்டு குழந்தைகளும் ஓட்டுனரும் சேலம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து கருமந்துறை மற்றும் கரிய கோவில் போலீசார் விபத்து குறித்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.