ஒருவர் கைது

ஆனைமலையை அடுத்த மீனாட்சிபுரம் சோதனை சாவடி அருகே இன்று ஆனைமலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகநாதன், சிறப்பு உதவி ஆய்வாளர் கர்ணன் மற்றும் முதல் நிலைக் காவலர் சிவராஜ் ஆகியோர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அவ்வழியாக வந்த தோஸ்த் வாகனத்தை சோதனை மேற்கொண்டனர்.

அதில் மூட்டை மூட்டைகளாக குட்கா பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இது குறித்து வாகன ஓட்டுனரிடம் கேட்டபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததாக தெரிகிறது.

மேலும் போலீசார் அவரை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்த முகமது ஹாபிஸ் (39) ,பல்வேறு மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வந்தது தெரிய வந்தது.இதனை அடுத்து முகமது ஹாபீசை மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 1,208 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் தோஸ்த் வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.