நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்று வட்டார பகுதிகளில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக வனப்பகுதிகளில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. வனப்பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் தண்ணீரின் இருப்பு குறைந்து நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
அதனால் முதுமலை புலிகள் காப்பக பகுதிகளில் வனவிலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில், மசினகுடி வனப்பகுதியில் தற்பொழுது காடுகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது
வனவிலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.அதனால் வனவிலங்குகள் ஊருக்குள் வருவது அதிகரித்து காணப்பட்டு வருகிறது அது மட்டுமின்றி இங்கிருந்து வேறு இடங்களுக்கு வனவிலங்குகள் இடம்பெயரும் வருகிறது
இந்நிலையில் வனவிலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்காக வனத்துறையினர் பலகட்ட முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர் வனத்துறை சார்பாக வனப்பகுதிக்குள் கட்டப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளில் வனத்துறை டேங்கர் வாகனம் மூலமாக நிரப்பி வருகின்றனர்.
குறிப்பாக மசினகுடி வனப்பகுதியில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டுள்ள நிலையில் அனைத்து இடங்களிலும் வனத்துறையினர் தினந்தோறும்காலை மற்றும் மாலை நேரங்களில் தொடர்ச்சியாக வனப்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் தண்ணீரில் நிரப்பி வரும் வனத்துறையினர் .