நள்ளிரவில் வனப்பகுதியை விட்டு வெளியே வந்த காட்டு யானை சுமார் அரை டன் தர்பூசணி பழங்களை சாப்பிட்டு சென்றது.சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் உதகை சாலையில் நேற்று நள்ளிரவு 1:30 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை சாலை ஓரத்தில் பழக்கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தர்பூசணி பழங்களை சாப்பிட்டது கடை உரிமையாளரும் அங்கு கூடியிருந்தவர்களும் யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாலும் பழக்கடையில் இருந்த சுமார் அரை டன் தர்பூசணி பழங்களை சாப்பிட்ட பிறகு காட்டு யானை அங்கு இருந்து மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது .


நள்ளிரவில் தர்பூசணி கடையை சூறையாடி கடையில் இருந்த தர்பூசணி பழங்களை சாப்பிட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.