திருப்பூர் ரயில் நிலையம் சாலையில் திமுகவினர் மத்திய அமைச்சர் தர்பேந்திர பிதான் தமிழக எம்பிக்களை நாகரீகமற்றவர்கள் என பேசியதை கண்டித்து உருவ பொம்மை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய கல்வி நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்த தமிழ்நாட்டு எம்.பிக்களை நாகரிகமற்றவர்கள் என பேசிய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து திருப்பூரில் திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளர் செல்வராஜ் தலைமையில், குமரன் சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒன்றிய அரசின் போக்கை கண்டித்தும் மத்திய அமைச்சரை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
போராட்டத்தில் திமுக நிர்வாகிகள் மகளிர் அணியினர் கலந்து கொண்டனர். தொடர்ந்து போராட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய அமைச்சரின் உருவ பொம்மையை திருப்பூர் ரயில் நிலையம் சாலை முன்பு செருப்புகளால் அடித்து, தீயிட்டு கொளுத்தினர். தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தீயை அணைத்து உருவ பொம்மை அங்கிருந்து அப்புறப்படுத்தினார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.