திருப்பூர் மணியக்காரம்பாளையம் பகுதியில் முகமது பயாஸ் என்பவர் கே எம் பி டெக்ஸ் என்ற பெயரில் பனியன் வேஸ்ட் குடோன் நடத்தி வருகிறார்.

பனியன் துணிகள் தைக்கும் பொழுது கிடைக்கும் சிறிய துண்டுகளை மீண்டும் பஞ்சாக மாற்ற அனுப்பி வைக்கும் குடோனாக நடத்தி வருகிறார்.

இந்த குடோனில் நேற்று இரவு 1:30 மணி அளவில் தீப்பற்றி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.

அருகில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து சென்ற திருப்பூர் தெற்கு தீயணைப்பு துறையினர் மற்றும் வடக்கு தீயணைப்பு துறையினர் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர் ஏராளமான பனியன் வேஸ்ட் துணிகள் இருந்ததால் ஐந்திற்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் உதவியுடன் 6 மணி நேரமாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் தொடர்ந்து புகைச்சல் இருப்பதால் அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பனியன் வெஸ்ட் துணிகள் எரிந்து சேதம் அடைந்தது.